நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாகவும், ஒளிப்பதிவு பணிகளை ஆர்.டி. ராஜசேகர் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இந்திய மதிப்பில் ரூ. 50 முதல் ரூ. 55 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படம் தொடர்பான முதற்கட்ட போட்டோஷூட் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், ஏப்ரல் 17-ஆம் திகதி நடிகர் விக்ரமின் பிறந்த நாளை ஒட்டி இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாத தொடக்கத்தில் தொடங்கும் என்றும் இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாத காலப்பகுதியில் திரைக்கு கொண்டுவர திரைப்படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .இத்திரைப்படம் நடிகர் விக்ரம் இரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.