மலையாள சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் 'அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன்' போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் ஆர்யா, கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனியின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஆரோ' என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இதில் ஷ்யாமா பிரசாத், அஸீஸ் நெடுமங்காடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித் இயக்கியுள்ளார்.
இந்த குறும்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த குறும்படம் நேற்று மம்முட்டி கம்பெனியின் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியாகி உள்ளது.