கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173 ஆவது திரைப்படத்தை சுந்தர் சி இயக்க இருந்தார். மூவரும் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் தொடக்கம் குறித்து தகவல் வெளியாகியிருந்தன.
ஆனால் சில நாட்களிலேயே திரைப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். எதிர்பாராத காரணங்களால் விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே பவர் பாண்டி மூலம் இயக்குநராக தன்னை நிலை நிறுத்திய தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன், இட்லி கடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தற்பொழுது ரஜினியின் 173ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக இரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.