கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு, ராம் கோபால் வர்மா தனது விருப்பமான வகையான Horror பக்கம் திரும்பியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, மனோஜ் பாஜ்பாய் கதாநாயகனாகவும், ஜெனிலியா தேஷ்முக் கதாநாயகியாகவும் நடிக்கும் 'போலீஸ் ஸ்டேஷன் மெய்ன் பூத்' திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளார். இதை அறிவிக்கும்முகமாக வெளியான FirstLook அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருப்பினும் அவரது கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
தற்போது படப்பிடிப்பு நடந்து வருகின்ற நிலையில், தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியீட்டு திகதியை அறிவிக்கவில்லை என்றாலும், 'போலீஸ் ஸ்டேஷன் மெய்ன் பூத்' அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.