ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கப்போவதாகத் தகவல் வெளியானது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.
'கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, Planஉம் இருக்கு. ஆனால், அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் தயார் இல்லை. தயாரானதும் நடிப்பேன்' என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் கதை மற்றும் இயக்குநர் இன்னும் முடிவாகாததால், இத்திரைப்படத்திற்கு முன்பாக வேறு ஒரு திரைப்படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளார்.
இத்திரைப்படத்தை இயக்க சுந்தர் சி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.