சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘Tourist Family’.இந்த திரைப்படத்தினை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இவர் தற்போது, ‘Tourist Family’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய மதன் என்பவர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தினை MRP Entertainment மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் 'சத்யா' எனும் கதாபாத்திரத்திலும் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக 'மோனிஷா' எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது இத்திரைப்படத்திற்கான Dubbing பணியில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் ஈடுபட்டுள்ளார். இந்த திரைப்படத்திற்கான Title இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளநிலையில், விரைவில் Title Teaser வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.