பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'Thug Life’.
இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இத்திரைப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜோர்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் தனது கதையை சிம்பு மற்றும் விஜய் சேதுபதியிடம் கூறியதாகவும், இதில், நடிகர் சிம்பு வெற்றிமாறனின் ‘அரசன்’ மற்றும் அஷ்வந்த் மாரிமுத்துவின் இயக்கத்தில் வேறொரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருப்பதால், விஜய் சேதுபதியை கதாநாயகனாக்க முடிவு செய்துள்ளார்.
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்திடம் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.