இதையடுத்து இவர் தமிழ் மொழி திரைப்படங்களைத் தாண்டி தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த இவர், சமீபகாலமாக முழு நேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இதேவேளை சமீபத்தில் திரைப்படங்களில் நடிக்காதது பற்றி நடிகை ரோஜா தெரிவித்துள்ள கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது "நடிகர் விஜய்யுடன் 'நெஞ்சினிலே' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன்.சில வருடங்கள் கழித்து, அவரது நடிப்பில் 'காவலன்' படத்தில் அசின் அம்மாவாக நடித்தேன். அந்தப் படப்பிடிப்பில் என்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய், 'மேடம்.. நீங்கள் எனக்கு மாமியாராக நடிக்கிறீர்களா?. படக்குழுவில் சொன்னபோது, அவர்கள் சும்மா சொல்கிறார்கள் என்று நினைத்தேன். நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்று தெரிவித்தார்.
அதனால் தான் நான் சினிமாவில் அம்மா, மாமியார் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று ஒதுங்கினேன் " என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.