எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்' திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் இத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்
இத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் விஜய் பாடிய 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் பாடல் நேற்று மாலை 6.03ற்கு வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து 'ஜன நாயகன்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.