பிரபல தயாரிப்பு நிறுவனமான பெஷன் ஸ்டுடியோஸ், சித்தார்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை அறிவித்து , அதன் Title Poster ஐ வெளியிட்டுள்ளது. ’ரவுடி அண்ட் கோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத்திரைப்படத்தை கார்த்திக் G கிரிஷ் இயக்குகிறார்.
2023 ஆம் ஆண்டு வெளியான 'டக்கர்' படத்திற்குப் பிறகு கார்த்திக் G கிரிஷுடன் சித்தார்த் மீண்டும் இணைந்துள்ளார்.
சுதன் சுந்தரம் தனது பேஷன் ஸ்டுடியோஸ் பேனர் மூலம் இந்தத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார். திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.