நடிகை சமந்தா கடைசியாக 'சுபம்' திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் அவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.
இருப்பினும், அவர் தயாரிப்பதாக அறிவித்த முதல் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது மீண்டும் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது.'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி இருக்கும்நிலையில், அது தொடர்பான வீடியோவை சமந்தா பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் சமந்தா, குல்ஷன் தேவையா மூத்த நடிகை கௌதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.