நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக சாரா அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் முன்னதாக ருக்மிணி வசந்த் கநாயகியாக நடிக்க இருந்ததாகவும், திகதிகள் பிரச்சினை காரணமாக அவர் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சாரா அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறதது.
இதேவேளை தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள ’கர’ படம் எதிர்வரும் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பித்தக்கது.