Google Android இயங்குதளத்தில் கண்டறியப்பட்ட உயர் தீவிர பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக Android Smartphone பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உயர் தீவிர பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி கொள்பவர்கள் பயனர்களின் Smartphone சாதனங்களில் இருந்து உயர்த்தப்பட்ட சலுகைகள் பெறலாம் அல்லது குறீயீடுகளை இயக்கலாம் என்ற அச்சுறுத்தல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய Android OS பதிப்புகளில் இருந்து தற்போதைய OS பதிப்புகள் வரை பாதிக்கப்படுகின்றன. அவற்றின் படி, Android 13, Android 14, Android 15, Android 16 இந்த ஆண்ட்ராய்டு OS பதிப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர் தீவிர பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி நடத்தப்படும் அத்துமீறல்களை சமாளிக்க கூகுள் மற்றும் ஸ்மார்ட்போன் சாதன உற்பத்தியாளர்கள் வெளியிடும் சமீபத்திய Android பாதுகாப்பு இணைப்புகளை நிறுவது அத்தியாவசியமாகும்.