2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மம்மூட்டி சிறந்த நடிகராகவும், ஷாம்லா ஹம்சா சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.'பிரம்மயுகம்' திரைப்படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகராகவும், 'பெமினிசி பாத்திமா' திரைப்படத்தில் நடித்ததற்காக புதுமுகமான ஷாம்லா ஹம்சா சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மலையாள சினிமாவில் வசூலை வாரிக் குவித்த 'மஞ்சுமல் BOYS' திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 9 விருதுகளை மொத்தமாக வென்றுள்ளது.