'பைசன்' திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இப்போதுதான் படம் பார்த்தேன் மாரி. மிகவும் பிடித்திருந்தது. நீதான் அந்த பைசன். உன் படைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன். இதை தொடர்ந்து செய். உன் குரல் முக்கியமானது” என்று தெரிவித்திருக்கிறார்.
'வாழை' திரைப்படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள திரைப்படம் 'பைசன்'. துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இத்திரைப்படம் தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.