இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் பார்ப்பதில் நீங்க தீவிரமானவரா? ஒரு ரீலைப் பார்த்து ரசித்துவிட்டு, பிறகு எங்கே பார்த்தோம் என்று தேடித் தேடிக் களைத்துப்போன அனுபவம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், இது உங்களுக்கான Update.
இன்ஸ்டாகிராம் தனது பயனர்களின் நீண்ட நாள் தேவையறிந்து ஒரு அசத்தலான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதுதான் Watch History அம்சம்.
இந்தப் புதிய வசதியின் மூலம், நீங்க சமீபத்தில் பார்த்த அனைத்து ரீல்களும் ஒரு இடத்தில் தானாகவே சேமிக்கப்படும்.
இனிமேல், பிடித்த வீடியோக்களைத் தவறவிட்டுடோமே என்று கவலைப்படத் தேவையில்லை.
நீங்க காணாமல் போனதாக நினைத்த ரீல்களைக்கூட இந்த History பட்டியலிலிருந்து எளிதாக மீட்டெடுக்கலாம்.
முதலில் உங்க இன்ஸ்டாகிராம் Profile பக்கத்தைத் திறக்கவும்.
மேல் வலது பக்கத்தில் உள்ள 3 கோடுகளைத் (Menu) தொட்டு, 'செட்டிங்ஸ் மற்றும் தனியுரிமை' பகுதிக்குச் செல்லவும்.
அங்குள்ள Your Activity விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது, உள்ளே இருக்கும் Watch History என்ற புதிய விருப்பத்திற்குச் செல்லவும்.
அவ்வளவுதான். நீங்க சமீபத்தில் பார்த்த அனைத்து ரீல்களின் பட்டியலையும் அங்கு பார்க்கலாம்.