நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர்.
அதைத் தொடர்ந்து யாஷ் தனது 19ஆவது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
இப்படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டு, பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதியாக இப்படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.