கலைப்புலி S.தாணு தயாரிப்பில் நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் 'அரசன்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகளவில் நிலவுகிறது.
இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு இளமை, முதுமை என இரு வேடங்களில் நடிக்கிறார் எனும் தகவல் சிம்பு இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் Promo எதிர்வரும் 16ஆம் திகதி திரையரங்குகளிலும் 17ஆம் திகதி இணையத்திலும் வெளியாகும் என 'அரசன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அறிவித்துள்ளார்.