தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது H.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம்,அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் இது என்று கருதப்படுவதால்,பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் முதல் single குறித்த தகவல் கிடைத்துள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் single தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கரூர் சம்பவத்தை தொடர்ந்து 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில் 'ஜனநாயகன்' முதல் singleஐ நவம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன, இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.