மலையாள திரையுலகின் ஜாம்பவான்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘பேட்ரியாட்’.
இத் திரைப்படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.
இத் திரைப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நீண்டகாலத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
இத் திரைப்படத்தின் Teaser வெளியாகி மக்களிடையே கவனம் ஈர்த்த நிலையில் இத் திரைப் படத்தின் Trailer வெளியாகியுள்ளது.
இத் திரைப்படம் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி வெளியாக இருந்த நிலையில் அண்மையில் திகதியில் மாற்றம் செய்யப்பட்டு இத் திரைப்படம் மே மாதம் 1ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.