தமிழ் சினிமாவின் எல்லைகளைத் தாண்டி, உலகத் திரையுலகமே வியந்து பார்க்கும் உன்னத கலைஞராகத் திகழ்பவர் கமல்ஹாசன்.
நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுவது, பாடல் எழுதுவது, பாடுவது எனப் பன்முகத் திறமையின் அடையாளமாக இருக்கும் இவர், தனது கலைப் பயணத்தில் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்.
இந்த நிலையில், திரையுலகில் கமல்ஹாசன் பங்களிப்பைக் கௌரவிக்கும் விதமாக, Alberta இந்திய திரைப்பட விழா 2025 நிகழ்ச்சியில்,'Golden Beaver Award' என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள சாதனைகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில், கனடாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் எனப் பல விருதுகளைப் பெற்றுள்ள கமல்ஹாசன், 2014ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார்.
வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, சமூகம் சார்ந்த விழிப்புணர்வையும், ஆழமான கருத்துகளையும் தாங்கி நிற்பதால், அவர் ஒரு சினிமாவில் தனித்துவமான கலைஞராக கமல்ஹாசன் திகழும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது, அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.