Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
'யூத்' படம் குறித்து ரிஷப் ஷெட்டி நெகிழ்ச்சி!

SOORIYAN GOSSIP - 'யூத்' படம் குறித்து ரிஷப் ஷெட்டி நெகிழ்ச்சி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views
'யூத்' படத்தை பார்த்த நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி 'யூத்' படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அசுரன், விடுதலை 2, வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் கென் கருணாஸ்.

இவர் இயக்கி நடித்த 'யூத்' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இதில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி வெளியான இந்த படம் முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை உலக அளவில் ரூ.85 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், 'யூத்' படத்தை பார்த்த நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி 'யூத்' படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு திரைப்படம் முழுவதிலும் நான் தொடர்ந்து புன்னகைத்துக்கொண்டே இருந்ததை உணர்ந்தேன்.

'யூத்' திரைப்படம் அன்பு, நட்பு மற்றும் ஆழமான உணர்வுகளால் நிரம்பியுள்ளது.

இது அனைத்து பெற்றோர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நெஞ்சார்ந்த காணிக்கையாகும்.

கதை, இயக்கம் மற்றும் நடிப்பு ஆகிய மூன்றையும் ஒருவரே ஏற்றுக்கொண்டு, அத்தனை நுணுக்கமான ஆழத்துடன் கையாண்டிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

ஒவ்வொரு நடிகரும் திரையில் மிக இயல்பாகவே உயிர்ப்புடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

இப்படத்தின் கலைப்பார்வையை முழுமையாக நம்பித் துணை நின்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் விக்கி, படத்தொகுப்பாளர் நாஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருக்குச் சிறந்த பாராட்டுக்கள்.

யூத் படத்தை உருவாக்கிய கென் கருணாஸ்- சகோதரரே, நீங்கள் திரையுலகிற்கு ஒரு மிகப்பெரிய சொத்தாகத் திகழ்வீர்கள்." என்று பதிவிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top