`அசுரன்', `விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நடிப்பை கடந்து ‘யூத்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படம் கடந்த மார்ச் 19-ஆம் திகதி வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
யூத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த நிலையில், பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்தனர். இத்திரைப்படத்தில் தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பள்ளிக்கூட பின்னணியில் உருவான இத்திரைப்படம் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ.82 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. சிறிய பட்ஜெட்டில் உருவான நிலையில், இத்திரைப்படம் வர்த்தக ரீதியிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.