இது தற்போது Atlas macOS-இல் கிடைக்கிறது. Windows, iOS மற்றும் Android பதிப்புகள் விரைவில் வரவிருக்கின்றன.
Atlas உலாவியில் URL-ஐ Type செய்வதற்குப் பதிலாக, பயனர்கள் ChatGPT-யுடன் உரையாடி தகவல்களைத் தேடலாம்.
இந்த உலாவி, பயனர்களின் பழைய உலாவி தரவுகளை இறக்குமதி செய்து, தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.
Atlas-இன் முக்கிய அம்சம், எந்த இணையதளத்திலும் ChatGPT-யுடன் உரையாடும் வசதி. இது பயனர்களின் தேடல்களை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையான பதில்களை வழங்கும்.
மேலும், Atlas-இல் உள்ள “Agent Mode” மூலம், பயனர்கள் ChatGPT-யை நேரடியாக பணிகளைச் செய்ய வைக்கலாம்.
இது Chrome, Safari போன்ற உலாவிகளுடன் ஒத்த அம்சங்களை கொண்டிருந்தாலும், AI-யை மையமாகக் கொண்டு புதிய அனுபவத்தை வழங்குகிறது.
Atlas தற்போது Business, Plus மற்றும் Pro பயனர்களுக்கே Agent Mode-ஐ வழங்குகிறது.