அட்லீ இயக்கிய விளம்பரப் படமான ‘ஏஜென்ட் சிங் அட்டாக்ஸ்’ இன் புரமோஷனின்போது, பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஸ்ரீலீலாவைப் பாராட்டினார்.
அவர் கூறுகையில், "ஸ்ரீலீலா மிகவும் அழகானவர், திறமையானவர், அது அனைவருக்கும் தெரியும். அவர் இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பார் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
ஸ்ரீலீலா, கார்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இத்திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.