S.S ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாகுபலி'.
இத்திரைப்படத்தில், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் இந்திய மதிப்பில், ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
2017ஆம் ஆண்டு 'பாகுபலி பாகம் 2' வெளியாகி அதுவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று இந்திய மதிப்பில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 'பாகுபாலி' திரைப்படத்தை Re-Release செய்ய திரைப்படக்குழு திட்டமிட்டுள்ளது.
இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே திரைப்படமாக 'Bahubali The Epic' என்ற பெயரில் இம்மாதம் 31ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், 'Bahubali The Epic' திரைப்படத்தின் Trailer வெளியாகி உள்ளது. இந்த Trailer நல்ல வரவேற்பைப் பெற்று திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.