கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி வெளியான 'லோகா' திரைப்படம் இரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப்பெற்று யாரும் எதிர்பாராத வசூலையும் ஈட்டியது.
தற்போது இத்திரைப்படம் Industry Hit திரைப்படமாக மாறியுள்ளது. இதுவரை கேரள சினிமாவில் அதிகம் வசூலித்த திரைப்படமான நடிகர் மோகன்லாலின் 'எம்புரான்' திரைப்படத்தைப் பின்னுக்குத் தள்ளி வசூலில் முதலிடம் பிடித்துள்ளது 'லோகா' திரைப்படம்.
இத்திரைப்படம் மொத்தமாக இந்திய மதிப்பில் ரூ.300 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.