தமிழ் திரையுலகில் வேகமாக உயர்ந்து வரும் இசையமைப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் சாய் அபயங்கர். இன்டீ (indie)பாடல்கள் மூலம் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அண்மைக்காலத்தில் பல பெரிய படங்களுக்கும் இசையமைத்து தமிழ் திரையுலகில் தனது தடத்தை பதித்துள்ளார்.
சமீபத்தில் சாய் அபயங்கர் "பவழ மல்லி" என்ற இன்டீ பாடலை வெளியிட்டார். இந்த பாடலை சாய் அபயங்கருடன் சுருதி ஹாசன் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடல் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
இந்தப் பாடலில் நடிகை கயாடு லோஹர் உடன் சாய் அபயங்கர் இணைந்து நடனமாடியிருப்பது இரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த பாடல் வெளியான குறுகிய காலத்தில் அதிக பார்வைகளை பெற்றுள்ளது. அதன்படி, யூடியூபில் இதுவரை 101 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.