'Thug Life' திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'அரசன்' திரைப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.
சிம்பு இத் திரைப்படத்தில் இளமை மற்றும் முதுமை என இரு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் 'அரசன்'
திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. மேலும் இத்திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாதம் 24ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ள நிலையில் சிம்பு புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது viral ஆகி
வருகிறது.