மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் இத் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.