தற்போதைய தமிழ் சினிமாவில் மண்வாசம் மாறாது பல வித்தியாசமான திரைக்கதைகளைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்கும் படைப்பாளிகளில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனக்கான தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான "பைசன்" திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்த கருத்து ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, "கட்டாயமாக நான் நடிக்க மாட்டேன். அதற்கு முக்கிய காரணம் நான் நடிகராகிவிட்டால், என் பின்னே வருவதற்கு ஒரு கூட்டம் உருவாகிவிடும். நடித்தால் எளிதாகக் கடவுளாகி விடலாம் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை நான் கடவுளாக விரும்பவில்லை." என்று தெரிவித்துள்ளார்.