எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வெளியாகும் என திரைப்படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் புதிய போஸ்டரை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.