ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் 'The Girl Friend' படத்தில் உள்ள 'நதிவே' பாடல் தற்போது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரூ.1 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் பாடலைத் திரைப்படத்தில் சேர்க்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் படத்தின் இறுதிப் பகுதியில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தப் பாடல் கதையின் உணர்ச்சி ஓட்டத்துடன் பொருந்தவில்லை என்று தயாரிப்பாளர்கள் உணர்ந்ததாகவும், இதனால் அதனை நீக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டாலும், ‘நதிவே’ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.