Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

SOORIYAN GOSSIP - பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

225 Views
பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தனது 92 ஆவது வயதில் காலமானார்.



நேற்று அவருக்கு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து அவர் உடனடியாக தென்மும்பையில் உள்ள பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சுவாச பிரச்சினை இருந்ததால், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

பாடகி ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி கோடிக்கணக்கான இரசிகர்களை கவர்ந்தவர்.

ஹிந்தி மொழியில் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடி உள்ளார். தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற 'செண்பகமே, செண்பகமே', ஹேராம் படத்தில் இடம்பெற்ற 'நீ பார்த்த பார்வை' , அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற ‘செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்’ , சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ‘கொஞ்சநேரம்.. கொஞ்சநேரம்’ உள்ளிட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.

மத்திய அரசின் பத்ம விபூஷண் விருதை ஆஷா போஸ்லே பெற்றுள்ளார்.

ஆஷா போஸ்லே மறைந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை ஆவார்.

இவருடைய மறைவு திரையுலகினரையும், இரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதேவேளை அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top