தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குநர் பொன்ராம்.'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இவர் தற்போது ,மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் , ‘கொம்புசீவி’ திரைப்படத்தில் முதல் முறையாக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர்.கவிஞர் பா.விஜய் வரிகளில் உருவான "அம்மா என் தங்ககனி,நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்" என்ற உணர்வுபூர்வமான பாடலை இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்பாடல் 'கொம்புசீவி' படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.