அனுமதியின்றி தனது பாடல்களை வேறு திரைப்படங்களுக்கு பயன்படுத்தியதற்காக sony music, Echo recording, oriental records நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை அஜித்தின் "குட் பேட் அக்லீ" திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாக வழக்கு தொடர்ந்து இருந்தார். sony நிறுவனத்திடம் 'குட் பேட் அக்லீ' திரைப்பட தயாரிப்பாளர் அனுமதி வாங்கி இருந்த நிலையில் தற்போதும் இது தொடர்பான வழக்கு இளையராஜா மற்றும் sony நிறுவனத்தினிடையே நடந்து வருகின்றது.
இந்த நிலையில் தீபாவளி தினத்தில் வெளியான "Dude " திரைப்படத்தில் கூட இளையராஜாவின் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது" என இளையராஜா தரப்பில் குற்றம் சாட்டி இருக்கின்றனர். இதைக்கேட்ட நீதிபதி அதற்கு தனியாக வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்று நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.