சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் தான் ‘Friends’.
மூன்று நண்பர்களின் ஆழமான பாசம், காதல் மற்றும் குடும்பப் பிணைப்புகளை மையமாகக் கொண்டு 2001ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் இரசிகர்களால் இரசிக்கப்பட்டது. அதிலும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் இரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், ‘Friends' திரைப்படத்தை மீண்டும் இம்மாதம் 21ஆம் திகதி Re-Release செய்ய உள்ளனர். இத்திரைப்படம் மீண்டும் 4k டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘Friends’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகியது.