உலகப் புகழ் பெற்ற OTT தள இணையத் தொடர் 'STRANGERS THINGS' இன் இறுதி அத்தியாயத்தைத் திரையரங்குகளில் வெளியிடத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
5ஆவது மற்றும் கடைசி சீசனின் இறுதி அத்தியாயம் டிசம்பர் 31ஆம் திகதி OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், அதே நாளில் திரையரங்குகளிலும் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த இணையத்தொடர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.