ஒருவர் தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது ஆரோக்கியமான தூக்க நேரமாகக் கருதப்படுகிறது. ஆனால் இன்றைய நவீன உலகில் பலர் படுக்கைக்கு தாமதமாக செல்வதை பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதனை தினமும் செய்யும்போது காலை நேர எச்சரிக்கை உணர்வு குறையும். அதே சமயத்தில் பகல் நேரத்தில் மோசமான கவனிப்புத்திறனை அனுபவிப்பீர்கள். தூக்கம் என்பது உடலை மீட்டமைப்பதற்கும், ஹோர்மோன்களை சீராக்குவதற்கும், உங்களுடைய சருமத்தை பொலிவாக வைப்பதற்கும் மிகவும் உதவுகிறது.
எனினும் பல மாதங்களுக்கு தினமும் நண்பகல் வரை தூங்குவதால் காலைநேர வெளிச்சத்திற்கு உங்களை குறைவாக வெளிப்படுத்திக் கொள்வீர்கள். இதனால் உடலின் உட்புற கடிகாரம் சீர்குலைந்து, உங்களுடைய மனநிலை மோசமாகலாம், சோர்வு அதிகரிக்கலாம், மனசோர்வுக்கான அறிகுறிகள் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகமாக உள்ளது. அதோடு சாப்பிடுவது மற்றும் உடல் செயல்பாடு சம்பந்தப்பட்ட மாற்றங்கள், குறிப்பாக இரவு நேரத்தில் நொறுக்கு தீனிகள் அதிகமாக சாப்பிடுவது பகல் நேரத்தில் குறைவான உடல் செயல்பாடு காரணமாக உடல் எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்புத் திறன் மற்றும் பசியை தூண்டும் ஹோர்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
உங்களுடைய வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துங்கள். ஒருவேளை நீங்கள் அதிக உடல் எடை கொண்டவராக இருந்தால் உடல் எடை இழப்பில் கவனம் செலுத்துங்கள். ஏரோபிக் மற்றும் ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகளில் வழக்கமான முறையில் ஈடுபடுங்கள். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருக்கும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.