ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைக்க விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க வேகமாக உருவாகிவரும் படம் கத்தி. சமந்தா நாயகி என்பதும் உங்க எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்!
வளவளன்னு பேசாம... விசயத்துக்கு வாய்யான்னு நீங்க கேட்கிறது புரியுதுங்க.
என்ன விசயம்னா... கத்தி படத்தில எப்பிடி நடிப்பாரு விஜய்? என்ன கதையாக இருக்கும்னு அறியும் ஆர்வம் எல்லோருக்கும் ரொம்ப ஓவரா இருக்கும், நமக்கும் தான் !
சரி , இப்போ லைட்டா கத்தி படத்தில் என்னமாதிரி நம்ம விஜய் நடிக்கிறார்னு கதை கசிஞ்சிருக்குன்னா நம்புவீங்களா? நம்பித்தான் ஆகணும் மக்கள்ஸ்! ஆஹ், ஒரு விஜய் 90 பணயக்கைதிகளை கடத்தும் தீவிரவாத கும்பலுக்கு தலைவனாகவும், அடுத்த விஜய் அவர்களை பாதுகாப்பாய் மீட்கும் ஹீரோவாகவும் தோன்றுகிறார் என்பது இப்போ கிடைச்ச செய்தி. ஸோ.. இதிலிருந்து தெரிய வர்றது என்னனா, ஹீரோவும் வில்லனும் விஜய்தான் எனும் முடிவுக்கு வந்திடலாம்!
ஆமாங்க, இரண்டு விஜயும் மோதிக்கொள்ளும் அதிரடியான சண்டைக் காட்சிகளும் படத்தில் இடம் பெறுகின்றனவாம் (ம்ம் ! அது இல்லாட்டி..)