பெண்களை விட அதிகமாக ஆண்களுக்குத்தான் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது..சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு ஒரு சில காரணங்கள் உண்டு.இருந்தபோதிலும் இந்த சர்க்கரை நோய் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் பாலியல் தொடர்பான திறனுடன் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
பொதுவாக சர்க்கரை நோய் வந்தாலே உடலில் உள்ள உறுப்புக்கள் பாதிக்கப்பட்டுவிடும்.இதனால் இரத்தநாளங்கள் சிதைவடைய வாய்ப்பதிகம்.இதன்காரணமாக ஆண்களுக்கு விறைப்புத்தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு, விந்து முந்துதல், செக்ஸ் உணர்வில் ஈடுபாடு குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
இரத்தச்சர்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்கள் கட்டாயமாக அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் ஆண்மைக்குறைவுக்கு உள்ளாவது உறுதி.
ஆண்கள் பொதுவாக மது போதை புகைத்தல் கட்டுப்பாடற்ற பாதுகாப்பற்ற வாழ்க்கை வாழ்தல் போன்ற தீய பழக்கங்கள் மட்டுமல்லாது மனஇறுக்கம் ,அதிக யோசனை, வேலைப்பளு காரணங்களால் அதிக ஓய்வு தேவைப்படுகின்றது.
இதனால்தால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைவது மாத்திரமின்றி சர்க்கரை வியாதியால் அதிக பாதிப்புகளும் உண்டாகின்றன.