Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
சட்டவிரோத ஐ.பி.எல் ஒளிபரப்பு வழக்கில் நடிகை தமன்னா!

SooriyanFM Gossip - சட்டவிரோத ஐ.பி.எல் ஒளிபரப்பு வழக்கில் நடிகை தமன்னா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

96 Views
2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் சட்டவிரோதமாக Fair Play செயலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது  தொடர்பான வழக்கில், நடிகை தமன்னாவுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. 

பையா , ஜெயிலர் , வீரம் , பாகுபலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த தமன்னா , தற்போது அரண்மனை 4 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் சட்ட விரோதமாக Fair Play செயலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால், ஐ.பி.எல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை பெற்ற தங்கள் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக, வியாகொம் நிறுவனம் இந்திய சைபர் கிரைமில் முறைப்பாடளித்தது.

இந்நிலையில், Fair Play செயலிக்கான விளம்பரத்தில் நடித்த தமன்னா , சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது என மகாராஷ்டிரா சைபர் கிரைம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி விசாரணைக்கு பிரசன்னமாகுமாறு நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் பொலிஸார் மனு அனுப்பினர். ஆனால் அவர் குறிப்பிட்ட நாளில், தான் இந்தியாவில் இல்லை என்றும், அதற்கு பதிலாக தனது பதிலை பதிவு செய்ய மற்றொரு திகதியை ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஏப்ரல் 29 ஆம் திகதி நடிகை தமன்னா பாட்டியாவை விசாரணைக்கு நேரில் பிரசன்னமாகுமாறு மகாராஷ்டிரா சைபர் கிரைம் பொலிஸார் அறிவித்துள்ளனர். தமன்னா இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவாரென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top