தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், ஒரு சிறுமியின் காணொளியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான '99 'songs என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார்.
தற்போது 'மூப்பிலா தமிழ் தாயே' என்ற பாடலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அதில் ஒரு சிறுமி ஏ.ஆர்.ரகுமானின் முதல் படமான ‘ரோஜா’ படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலை தமிழ் மொழியில் பாடுகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி, லைக்குகளை குவித்து வருகிறார்கள்.