பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, வேகமாக கேக் உண்ண முயன்ற சிறுவனின் தலையில் தீ பிடித்து எரியும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
குறித்த காணொளியில், பிறந்தநாள் விழாவை கொண்டாட ஆயத்தமாக இருக்கும் சிறுவன், எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தியை அணைக்காமல் வேகமாக கேக் மீது வாய் வைக்கிறான்.
அப்போது திடீரென அவனது தலையில் பட்ட தீ முடியில் பற்றி எரிய ஆரம்பிக்கிறது. இதனை பார்த்த பெற்றோர் உடனடியாக அந்த தீயை விரைந்து அணைக்கின்றனர். அப்பொழுது தான் தன் தலையில் தீ பிடித்திருப்பதையே அந்த சிறுவன் உணர்வதை போல அந்த காணொளி இருந்தது.
இந்த காணொளி சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட 1 மணி நேரத்திலே 7.1 மில்லியன் பார்வையாளர்களையும், 23,000 கருத்துகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.