உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருபவரும் கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றும் பில்கேட்ஸ், burger வாங்க ஹொட்டேல் முன்வரிசையில் நின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 'டிக்ஸ் டிரைவ் இன்' என்ற சிறிய ஹொட்டேல் உள்ளது. இங்கு burger வாங்க சென்ற பில்கேட்ஸ், அங்கு ஏற்கனவே சிலர் வரிசையில் நின்று கொண்டிருந்தமையால் அவர்களை தொடர்ந்து பில்கேட்சும் வரிசையில் நின்று burgerரை வாங்கினார்.
வரிசையில் நின்று burger வாங்கியது பில்கேட்ஸ்தான் என்பதை அடையாளம் கண்டு கொண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்து பில்கேட்சுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.
இதுகுறித்து பில்கேட்சிடம் கடைக்காரர் கேட்டதற்கு, தன்னிடம் ஏராளமாக பணம் இருந்தும் தான் விரும்பிய சுதந்திரம் இல்லை, தற்போது அதனை விரும்புகிறேன், என கூறிச் சென்றுள்ளார்.