55 வயதான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லண்டனில் இருக்கும் செயின்ட் தோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு நோய் தோற்று அதிகமாகியுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் அவரின் உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் மாளிகையில் சுகாதாரத்துறை ஆலோசகர் உள்ளிட்ட பலருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை மூலம் சார்ல்ஸ் குணப்படுத்தப்பட்டார்.