கிரியேட்டர்கள் யுகமாக சோஷியல் மீடியாக்கள் மாறிவிட்டன. இதன் மூலம் இப்போது இலட்சக்கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம். அந்தவகையில் YouTube நிறுவனம் கொண்டு வந்திருக்கும் புதிய செயலி, மொபைல் போன் பயனர்கள் தங்களது கைவசம் உள்ள வீடியோக்களை தரமான வகையில் எடிட் செய்ய உதவுகிறது.
அந்த செயலியின் பெயர் YouTube கிரியேட். சந்தா கட்டணம் ஏதுமின்றி இயங்கும் இந்த செயலியை யூடியூப் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இப்போது இந்தியா உட்பட 13 நாடுகளுக்கு இதன் சேவையை விரிவு செய்துள்ளது. இந்த செயலி இப்போதைக்கு பீட்டா வெர்ஷனாக இயங்கி வருகிறது. உலக அளவில் உள்ள பயனர்களின் கருத்துகளை பெற்று இது மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை பயன்படுத்தி பயனர்கள் எளிய முறையில் வீடியோக்களை எடிட் செய்யலாம் என YouTube நம்புகிறது. தொழில்முறை வீடியோ எடிட்டிங் பணியில் உள்ள சவால்கள் இதில் பயனர்களுக்கு இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.
இதுவரை வீடியோ எடிட் செய்வது எப்படி என யோசித்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் இனி YouTube கிரியேட் செயலியை பயன்படுத்த ஆரம்பியுங்கள். உங்களின் தேவைகளை இந்த செயலி மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம்.