"இந்தியன்2" திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படம் மிக நீண்ட காலமாக,தயாரிப்பு பணிகளிலும் பின்னர் படப்பிடிப்புகளிலும் பல சிக்கல்களை சந்தித்த நிலையில்,தற்போது படப்பிடிப்பு பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றது.
அண்மையில் இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி அதிக கவனம் பெற்றிருந்தது.
இந்நிலையில் 'இந்தியன் 2' படத்தின் பிரத்தியேக போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அதில் இப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பையும் தெரிவித்துள்ளனர்.
இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.