இன்றயகாலத்தில் இளையோர் முதல் பெரியோர் வரை இருக்கும் பிரச்சனைதான் உடல் எடை அதிகரிப்பு உடல் எடை பிரச்னை என்பது ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு உடல் எடை அதிகளவில் அதிகரித்து பல உடல் தொல்லைகளை ஏற்படுத்தி விடுகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என தினமும் கடைபிடித்தால் தான் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
உடல் எடையை கட்டுப்படுத்தாவிட்டால் சர்க்கரைநோய், தைரோயிட் பிரச்னை என தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம் உடல் எடையை கட்டுப்படுத்த அதிக செலவில்லாமல் பாரம்பரிய மருத்துவம் சில எலுமிச்சம் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறைவதுடன் ஆரோக்கியம் பெற்று விடலாம். ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு தேன் ஒரு தேக்கரண்டி இரண்டையும் நன்றாக கலந்து காலையில் சாப்பிட வேண்டும்.
தினமும் 10 பச்சைப் பூண்டுகள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் எடை குறைவதுடன் அழகும் கூடும் 50 மில்லி கிராம் இஞ்சி சாற்றை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து நன்றாக கொதித்ததும் இறக்கி ஆறவிட்டு விட்டு 50 மில்லி கிராம் தேன் கலந்து தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தொப்பை குறைந்துவிடும். சீரகத்தை கஷாயம் வைத்து ஒரு நாளைக்கு 3 வேளை வீதம் 60 நாட்கள் சாப்பிட வேண்டும். தினமும் அருகம் புல் சாறு காலையில் சாப்பிட்டு விட்டு மதியம் சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் கொழுப்பு குறைந்து விடும். பார்லி அரிசியை நன்றாக வேகவைத்து இறுத்த நீரைக் குடித்தால் தொப்பைக் குறைந்துவிடும். பப்பாளிக் காயை துண்டுகளாக்கி சமைத்து உண்டால் தடித்த உடம்பு குறைவதுடன் தாய்ப்பால் பெருகும்.
வெந்நீருடன் தேன் கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை குறையும். சிறுகீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து உண்டால் சிறுநீர் உடலில் இருந்து வெளியேறி உடலில் உள்ள நீர்க்கோர்வை நீங்கிவிடும். புதினா இலையை அடிக்கடி உணவில் கலந்து கொண்டால் உடலில் சேரும் தேவையில்லாத கொழுப்புகள் நீங்கும்.