Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
14
சர்ச்சைக்குள் சிக்கிய 'தளபதியி'ன் தந்தை - தமிழ்நாடு பரபரப்பு.

Sooriyan Gossip - சர்ச்சைக்குள் சிக்கிய 'தளபதியி'ன் தந்தை - தமிழ்நாடு பரபரப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,410 Views
ஏதாவதொரு சர்ச்சையில் அடிக்கடி இழுக்கப்படும் தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் ஒருவர் தளபதி விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது செயற்பாடுகளால், சமூக வலைத்தளங்களில் 'தளபதி' விஜய்யும் சேர்ந்தே விமர்சிக்கப்படுவது வழமை.
தமிழ்நாடு விரைவில் மாநிலங்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், எப்போதும் போன்றே அரசியல் வட்டாரத்திலுள்ளவர்கள் தமது தேவைகளுக்கு ஏற்றவாறு கட்சித்தாவலை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அதிலும், திரையுலகம் சார்ந்த பிரபலங்கள் பலர் அரசியலிலும் பங்கெடுத்துள்ளதால் கட்சிதாவிகள் பற்றிய பேச்சுக்களும், அவதானிப்புகளும் தமிழ்நாட்டை ஆக்கிரமித்துள்ளன.

இது இப்படியிருக்க, எதிர்கால தமிழ்நாட்டு முதல்வர் தான் என்ற கனவில் 'தளபதி' விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவரும் நிலையில், அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் பாரதீய ஜனதா கட்சியில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது மத்தியில் ஆட்சியிலுள்ள பாரதிய ஜனதா கட்சியில் நடிகை குஷ்பு, சுகன்யா, கருணாஸ், விஷால் உள்ளிட்டோர் இணைய போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதனை சிலர் மறுத்து கருத்து தெரிவித்திருக்க, நடிகை குஷ்பு மட்டும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டதால் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், தனது பெயரும் இவர்களது பட்டியலில் அடங்கியுள்ளதாக செய்திகள் வெளியானதால் உஷாரான எஸ்.ஏ.சந்திரசேகர், உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளதோடு, "இது முற்றிலும் வதந்தி. நான் பா.ஜ.க.வில் இணையப்போவதாக வெளியான செய்திகள் தவறானவை. எவ்வாறு, எங்கிருந்து இப்படியான செய்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை'' என கூறி இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.






Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top